Jul 30 2007
திகதி வடிவமைப்பு
திகதிகளை பல வடிவமைப்புக்களில் வெவ்வேறு நாடுகளில்/ வெவ்வேறு மொழிகளுக்கேற்ப எழுதுகிறார்கள். நீண்ட முறை [long format] என்றும் குறுகிய முறை [short format] என்றும் சாதாரணமாக கையாழ்கிறார்கள்.
17 ஜூலை 2007 – long format
17-07-2007 – short format
எந்த முறையில் கணியில் காட்டப்பட்டாலும் இயல்நிலை [default] ஆக அமெரிக்க முறையில் தான் சகல விதத்திலும் இருக்கும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள். சேமிக்கும்போது , தானாக காண்பிக்கும்போது என்று அமெரிக்க முறையிலேயே காண்பிக்கப்படும். வேறு விதமாக வேண்டுமானால், அந்த திகதி வடிவமைப்பு முறையை மாற்றவேண்டும்.
மென்பொருள் எழுதுபவர்களுக்கு இது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இப்போது பல இலகுவாக்க வழிகள் வந்துவிட்டாலும், “09/11/2001″ என்று உபயோகித்தால் அது செப்டம்பர் மாதம் 11ம் திகதி என்றே கணக்கிலெடுக்கும். ஆனால் உங்களுக்கு நொவெம்பர் மாதம் 9ம் திகதி வெண்டுமென்றால், மென்பொருள் எழுதுபவர் அதற்கேற்ப மாற்ற வேண்டியிருக்கும்.
DD = திகதி
MM = மாதம்
YYYY = வருடம்
கனடா [ஆங்கிலம்]/ பிரித்தானிய முறை
DD/MM/YYYY
பிரஞ்சு முறை
YYYY-MM-DD
அமெரிக்க முறை
MM/DD/YYYY
இதில் மாதமும் திகதியும் எப்போதும் குழம்புப்பட்டுக்கொண்டிருக்கும்; திகதி 13 ஐ விடக் குறைவென்றால்.
கணினிமயமான உலகில் பல மென்பொருள்கள் அமெரிக்க திகதி வடிவமைப்பிலேயே இயங்குகிறது. கனடாவில் திகதி வடிவமைப்பு முறை வேறு என்றாலுங்கூட பல நிறுவனங்களில் ஊழியர்கள் அமெரிக்க திகதி வடிவமைப்பு முறையிலேயே பாவிக்க வேண்டி இருக்கிறது; ஏனெனில், அமெரிக்க மென்பொருளை உபயோகிப்பதால். கனேடிய முறை வேண்டும் என்பதற்காக மட்டுமே புதிய ஒரு மென்பொருள் பல இலட்ச செலவில் எழுத முடியாது தானே.
கணியில் இடும்போது “09/11/2001″ என்று இடாமல், “2001/11/09″ என்று இட்டால் அது உங்களுக்குத் தேவையான நொவெம்பர் 9ம் திகதி எனக் கணக்கிலெடுக்கும்.
இதே வடிவமைப்பை தாளில் [பேப்பரில்] எழுதும்போதும் பயன்படுத்தலாம். இந்த முறையில் ஒரு வசதியும் இருக்கிறது. எத்தனை பேர் திகதி எழுத எத்தணித்து விட்டு, அட இன்றைக்கு எத்தனையாம் திகதி என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள். இது திகதி-மாதம்-வருடம் என்று எழுத எத்தணிப்பதால், முதலில் திகதி தெரியவில்லையென்றால் எழுதத் தொடங்காமலே யோசிப்பீர்கள். அப்படி இல்லாமல் வருடம்-மாதம்-திகதி, என்றால் உடனே முதல் இரண்டையாவது எழுதிவிடுவீர்கள். முதல் இரண்டை எழுதும் நேரத்தில் திகதியைக் கண்டுபிடித்துவிடுவீர்கள்.
ஆகவே, தமிழீழத்தில் “வருடம்-மாதம்-திகதி” என்ற குறுகிய முறையைக் கையாள்வது நலம் என்று நினைக்கிறேன். நீண்ட வடிவமைப்பு எவ்வாறாயினும் இருக்கலாம்.
Related posts:
- அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்க ட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அட ங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சம ர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங் க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவ ல் கசிந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 https://mail.google.com/mail/?ui=2&shva=1#பதிந்தவர்_வன்னியன் on February 15, 2010 பிரிவு: பிரதானச்செய்திகள் முன்னாள் இராணுவ தளபதி...
- Pillai Raja Koopura foundation stone Dear all Pillaiyaar Raja Koopura foundation stone laid...
- Feeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி எனது வலைபதிவை சேர்ப்பதற்கு, உங்களின் தகவல் ஓடைத் திரட்டியைத் தெரிவுசெய்யுங்கள். Please choose...
- விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்” -சொல்கிறார் ருத்திரகுமார். பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து...
- பாதுகாப்பு அனுமதி நடைமுறையை தளர்த்துவது தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி நடைமுறையை தளர்த்துவது தொடர்பில் ஆராயுமாறு சட்டமா...
No responses yet