Mar 03 2008

CAPitalZ

வீதி வடிவமைப்பு

கனடாவில் வீதி வடிவமைப்புக்கள் மிகவும் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், அதிக வாகனங்களின் காரணமாக, வீதி நெரிசல்கள் ஏற்படுவதுண்டு. இங்கே நான் கண்ட வாகன நெரிசல்களைத் தவிர்க்கும் வழிகளைக் கவனத்தில் கொண்டு எழுதுகிறேன்.

இங்கே கடுங்குளிரின் காரணமாக, வாகனம் ஒன்றாவது ஒரு குடும்பம் வைத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

ஆனால், இங்கே போன்று தமிழீழத்திலும் வீதிகளை வடிவமைத்தால் போக்குவரத்து மிகவும் சீராக அமையும்.

எந்த வீதியிலும் இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் போகக்கூடிய வாறு அமைப்பது என்பது மிக மிக அவசியம். இது ஒரு வாகனம் மிகவும் மெதுவாக பயணிக்குமாயின், அடுத்து வரும் வாகனங்களும் தடைப்பட்டு ஒரு மிக நீண்ட வாகன நெரிசலை உண்டுபண்ணாமல் தடுக்க உதவும்.

இடம் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு சந்தியிலும், வலது புற மற்றும் இடது புற திரும்பும் வாகனக்களுக்கு என்று தனியாக [புதிதாக] அமைக்க வேண்டும். ஏற்கனவே ஒரு திசையில் செல்லும் வீதியில் இருக்கும் இரண்டு வழிகளை விட இவ் வழிகள் அமைப்பது இப்படி வலது (அ) இடது புறம் திரும்பும் வாகனங்களால், பின்னுக்கு வரும் வாகனங்கள் காக்க நேரிடாமல் செய்யும். இப்படி புதிதாக உருவாக்கும் வழியில் ஒரு வாகனமேனும் மற்றய பின்னுக்கு வரும் வாகனங்களைத் தடுக்காமல் ஓரமாக நிற்க இயலுமாயின், அதுவே பெரிய வாகன் நெரிசலைத் தவிர்க்கக் கூடியது.

அப்படி வலது மற்றும் இடது புறம் திரும்பும் வாகனங்களுக்கு என்று தனியாக வழி அமைக்க இடம் போதாக் குறையாயின், வலது புறமாகத் திரும்பும் வாகனங்களுக்காவது புதிய வழி அமைத்தல் நன்று. தமிழீழத்தில் இடது புற ஓட்டுதல் முறை இருப்பதால், வலது புறம் திரும்புவதே கடினமான (அ) நேரம் எடுக்கும் செயலாகும். ஆகவே, வலது புறத்திற்குத் திரும்பும் வாகனங்களுக்கு மட்டுமாவது, சந்தியில், புதிய வழி அமைத்தால் வாகன நெரிசலைக் குறைக்கலாம்.

Related posts:

  1. ஏ9 வீதி வழியான போக்குவரத்து வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும்:டளஸ் அழகப்பெருமா யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான ஏ9 வீதியின் போக்குவரத்து வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்...
  2. Pillai Raja Koopura foundation stone Dear all   Pillaiyaar Raja Koopura foundation stone laid...
  3. Feeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி எனது வலைபதிவை சேர்ப்பதற்கு, உங்களின் தகவல் ஓடைத் திரட்டியைத் தெரிவுசெய்யுங்கள். Please choose...
  4. கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2243:2010-01-19-09-13-26&catid=932:2009-10-24-02-55-47&Itemid=180 கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு சனி, 19 ஜனவரி...

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly