இவற்றிற்கான களஞ்சியம் 'தொழில்' வகை

Sep 11 2007


அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்

அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதே தொழிலை தனிப்பட்ட முறையிலும் செய்யத் தடை விதிக்க வேண்டும்.

அரசாங்க சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு அதே தொழிலை ஒருவர் தனியாராக செய்தால் அவர் அரசாங்க தொழிலில் வரும் வாடிக்கையாளர்களை தனது சொந்த தொழிலுக்கு மாற்ற முயல்வார் (அ) தனது சொந்த தொழிலை அதி கூடிய கவனத்துடன் செய்வார்.  இதனால், அரசாங்கத்தின் தரம் குறையும்; அரசாங்கத்தின் மேலுள்ள மக்களின் நம்பிக்கை அற்றுப்போகும்.

கொழும்பில் தமிழ்ப் பாடசாலையில் பயிலும்போது எங்கள் கணித பாட ஆசிரியர் வகுப்பில் ஒரே நித்திரை கொள்வார்.  சரியாகப் படிப்பிப்பதும் கிடையாது.  வகுப்பில் ஒருவருக்குமே அவரைப் பிடிக்கவில்லை.   ஆனால், அவர் மாலை நேரத்தில் சொந்த tuition வைத்து சொல்லிக்கொடுத்துக்கொண்டு வந்தார்.  அங்கே அவர் மிகவும் கவனத்துடன் பாடம் நடத்தினார்.  அரசாங்க பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும், அட அதே பாடசாலை ஆசிரியர் ஆச்சே என்று அவரிடமே தமது பிள்ளைகளை tuition  இற்கு விடுவார்கள்.  ஒரு மாணவரிடம் ரூ.100/ மாதம் அறவிட்டார்.  ஆனால், அவர் ஒளுங்காக பாடசாலையில் பாடம் படிப்பித்திருந்தால் tuition  இற்குப் போகவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.  அவரும் தனது tuition  இற்கு மாணவர்களை வரவழைக்க அப்படி நடந்துகொண்டார்.

அதற்காக எல்லா ஆசிரியர்களும் அப்படி என்று சொல்ல முடியாது என்று வாதிடலாம்.  இவரைப் போல் ஒரு விஞ்ஞான ஆசிரியர் பாடசாலையிலும் நன்றாகப் படிப்பித்தார், தனது சொந்த tuition  இலும் அதை விட நன்றாகப் படிப்பித்தார்.

இவை வெறும் ஆசிரியருக்கு மட்டுமல்லாமல் சகல உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும்.  ஒரு building foreman/ engineer  அரச வேலையை ஒழுங்காக செய்யாமல் (அ) தாமதப்படுத்தி தனது அதே சொந்தத் தொழிலைச் செய்யலாம்.  இதே போல் ஒரு வைத்தியரும் நடந்து கொள்ளலாம்.

ஆகவே, அரச உத்தியோகத்தில் உள்ளவர்கள் தனியாராக அதே தொழிலைச் செய்ய அனுமதிக்கக் கூடாது.  இது அரசாங்கத்தின் தரம் கெட்டுப் போக வழி வகுக்கும்.

அரசாங்க உத்தியோகத்தர் தனியாராகவூம் அதே தொழிலை செய்பவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் அந்த தனியார் தொழிலை விட்டு விலக ஒரு முறை குறைந்த பட்ச தண்டனை கொடுக்கலாம்.  அவர் அப்படி விலக மறுத்தால் (அ) மீண்டும் ஒருமுறை செய்தால்  ஆகக் கூடிய தண்டனையாக, அந்த நபருக்கு இனிமேல் எந்த அரசாங்க வேலையும் கொடுக்கக் கூடாது என்று தண்டனை கொடுக்க வேண்டும்.

One response so far

Jun 17 2007


தமிழில் தொழில் பெயர் பதிவு

Filed under தொழில்

கனடாவில் நிங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு அந்த நிறுவனப் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

அந்த பதிவுப் பத்திரம் ஆங்கிலத்தில் (அ) பிரஞ்சு மொழியில் மட்டும் தான் இருக்கும்.

கனடாவின் ஒரு மாகாணம் கியுபெக். கியூபெக் அரச கரும விண்ணப்பப் படிவங்கள்,
பிரஞ்சு மொழியிலேயே இருக்கும். ஆங்கில பிரதி தருவார்கள். ஆனால் அதை
உபயோகிக்க இயலாது [void என்று எழுதி இருக்கும்]. பரவாயில்லையே என்று
யோசிக்கிறீர்களா? அந்த பிரஞ்சு விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் பிரஞ்சில்
தான் நிறப்ப வேண்டும்!

இங்கே தமிழ் நிறுவனப் பெயரை பதிவுசெய்ய பல ஆங்கிலப் பெயர்களை பதிவுசெய்யவேண்டிய கட்டாயமாக இருக்கிறது. ஏன்? “காந்திமதி” என்ற பெயருடைய நிறுவனத்தை பதிவு செய்ய ஆங்கிலத்தில் “kanthimathi”, “Ganthimathi”, “Gandhimadhi” இப்படி பல மாறுபட்ட பெயர்களை பதிவு செய்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் கட்டவேண்டும். ஏனென்றால், வேறு ஒருவர் “காந்திமதி” என்றதை வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பில் பதிவு செய்யலாம்.

இதே போல் தமிழீழத்தில் எந்த நிறுவனப் பெயரையும் தமிழில் தான் பதிவு செய்யவேண்டும் என்று சட்டம் வேண்டும். ஆங்கில நிறுவனப் பெயர்களை வேறுபட்ட தமிழ் உச்சரிப்புக் கொண்ட எழுத்துக்கள் கொண்டு பதிவு செய்ய வேண்டிவரும். இதனால், பல தமிழ் ‍ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு, கணக்காளர்களுக்கு வேலை வரும். இதனால் வேலைவாய்ப்பு உள்ளதால், மேலும் தமிழ் கற்க முன்வருவார்கள்.

No responses yet

May 16 2007


அரசாங்கத்தால் செய்யப்படவேண்டிய தொழில்கள்

Filed under தொழில்

எந்தெந்த தொழில்கள் மனித அடிப்படை அத்தியாவசியத்திற்கு தேவையோ அவை தமிழீழ அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [நீர், மின்சாரம், தபால் சேவை, உள்ளூர் பேரூந்து சேவை, புகையிரத சேவை].  அது ஒரு நியாயமான விலையை அப் பொருள்களுக்கு/ சேவைக்கு வழங்கும்.  இலாபத்திற்கு என்று விலைகள் அளவுக்கதிகமாக உயராமல் இருக்க உதவும்.

எந்தெந்த தொழில்கள் சமூக நலனை பாதிக்குமோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [மதுபானம், சூதாட்டம், அதிட்ட லாபச் சீட்டு]  அது ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க உதவும்.  நேரங்கடந்த விற்பனையோ/ தரம் கெட்ட விற்பனையோ நடக்காமல் இருக்க உதவும்.

No responses yet

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.