இவற்றிற்கான களஞ்சியம் 'வீதி விதிமுறை' வகை

Mar 03 2008


CAPitalZ

வீதி வடிவமைப்பு

கனடாவில் வீதி வடிவமைப்புக்கள் மிகவும் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், அதிக வாகனங்களின் காரணமாக, வீதி நெரிசல்கள் ஏற்படுவதுண்டு. இங்கே நான் கண்ட வாகன நெரிசல்களைத் தவிர்க்கும் வழிகளைக் கவனத்தில் கொண்டு எழுதுகிறேன்.

இங்கே கடுங்குளிரின் காரணமாக, வாகனம் ஒன்றாவது ஒரு குடும்பம் வைத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

ஆனால், இங்கே போன்று தமிழீழத்திலும் வீதிகளை வடிவமைத்தால் போக்குவரத்து மிகவும் சீராக அமையும்.

எந்த வீதியிலும் இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் போகக்கூடிய வாறு அமைப்பது என்பது மிக மிக அவசியம். இது ஒரு வாகனம் மிகவும் மெதுவாக பயணிக்குமாயின், அடுத்து வரும் வாகனங்களும் தடைப்பட்டு ஒரு மிக நீண்ட வாகன நெரிசலை உண்டுபண்ணாமல் தடுக்க உதவும்.

இடம் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு சந்தியிலும், வலது புற மற்றும் இடது புற திரும்பும் வாகனக்களுக்கு என்று தனியாக [புதிதாக] அமைக்க வேண்டும். ஏற்கனவே ஒரு திசையில் செல்லும் வீதியில் இருக்கும் இரண்டு வழிகளை விட இவ் வழிகள் அமைப்பது இப்படி வலது (அ) இடது புறம் திரும்பும் வாகனங்களால், பின்னுக்கு வரும் வாகனங்கள் காக்க நேரிடாமல் செய்யும். இப்படி புதிதாக உருவாக்கும் வழியில் ஒரு வாகனமேனும் மற்றய பின்னுக்கு வரும் வாகனங்களைத் தடுக்காமல் ஓரமாக நிற்க இயலுமாயின், அதுவே பெரிய வாகன் நெரிசலைத் தவிர்க்கக் கூடியது.

அப்படி வலது மற்றும் இடது புறம் திரும்பும் வாகனங்களுக்கு என்று தனியாக வழி அமைக்க இடம் போதாக் குறையாயின், வலது புறமாகத் திரும்பும் வாகனங்களுக்காவது புதிய வழி அமைத்தல் நன்று. தமிழீழத்தில் இடது புற ஓட்டுதல் முறை இருப்பதால், வலது புறம் திரும்புவதே கடினமான (அ) நேரம் எடுக்கும் செயலாகும். ஆகவே, வலது புறத்திற்குத் திரும்பும் வாகனங்களுக்கு மட்டுமாவது, சந்தியில், புதிய வழி அமைத்தால் வாகன நெரிசலைக் குறைக்கலாம்.

No responses yet

Jul 10 2007


CAPitalZ

தமிழில் ஊர்ப் பெயர்

நம் நாடுகளில் இன்னும் பல ஊர்களுக்கு தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என்று தானே இருக்கிறது?

அவனுக்கு வாயில் நுழைவதற்காக நாம் இன்னும் மாற்றாமல் இருக்கிறோம். அதே ஊர்க்காரன் ஒருவனிடம் முகவரி கேட்டு வருபவர் ஆங்கில பெயரைக் கேட்டால் ஊர்க்காரன் முழிப்பான். ஊர்க்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள் பழிப்பார்கள். ஏன்? யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன? நாம் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து அடிமைகளாக சிந்திக்கிறோம்.

பருத்தித்துரை = Point Pedro
மட்டக்களப்பு = Batticaloa
யாழ்ப்பாணம் = Jaffna

இப்படி பல ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒன்றாகவும் ஆங்கிலத்தில் ஒன்றாகவும் இருக்கிறது.

கனடாவில் கியூபெக் என்னும் பிரஞ்சு மக்கள் அதிகமாக குடியிருக்கும் மாகாணத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்கள்:

Notre-Dame-De-Lorette
Dollard-Des-Ormeaux
Côte-St-Luc
L’Ascension-De-Notre-Seigneur
Pierrefonds
Montréal

நாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும் இன்னும் அடிமைக் குணம் போகவில்லையே.

தமிழீழத்தில் ஊர்ப் பெயர்கள் அந்த ஊரின் உண்மையான தமிழ்ப் பெயரிலேயே ஆங்கிலத்திலும் அழைக்கப்பட வேண்டும். மிகவும் நீளமான பெயர்கள் என்று கணிப்பிட்டால், தமிழ்ப் பெயரில் வரும் சொற்களில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் முதற் பாதி (அ) இறுதிப் பாதி சொல்லை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இது ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட தனது ஊரின்் பெயரைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

வீதிகளின் பெயர்களும் இவ்வாறே அமையவேண்டும்.

வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர்களைச் சூட்டலாம். அந்த தெருவில் வசித்த (அ) அந்த தெருவில் நடந்த சண்டையில் வீரச்சாவடைந்த முக்கியமான ஒரு மாவீரரின் பெயரைச் சூட்டலாம். எக்காரணங்் கொண்டும் அந்த தெருவிற்கு சம்பந்தமில்லாத மாவீரரின் பெயர் சூட்டப்படக்கூடாது.

மாவீரரின் பெயரை ஊர்ப் பெயருக்கு வைக்கக் கூடாது. எப்பொழுதும் ஊர்ப் பெயர் அந்த ஊரின் பொதுவான செயற்பாட்டை குறிக்குமுகமாக (அ) முக்கிய பூகோழ சின்னங்களுக்காக வைக்கப்படலாம்.

சேர்க்கப்பட்டது I [2007/07/19 @ காலை 9:00 GMT-5]:

எதிர்காலத்தில், ஊர்ப் பெயர், வீதிப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அது ஒரு இலகுவான காரியமாக அமையக் கூடாது.  பல கட்ட செயற்பாடாக, பல அனுமதிகள் பெறவேண்டியதாக இருத்தல் வேண்டும்.   பெயர் மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு [50 வருடங்கள்?]  மறுபடியும் பெயர் மாற்றம் கொண்டுவர முடியாததாக இருத்தல் வேண்டும்.  இல்லையேல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என பெயரை மாற்றிக்கொண்டே போய்விடுவார்கள்.

9 responses so far

May 16 2007


CAPitalZ

Roundabout vs சமிஞ்சை சந்திப்பு

Roundabout

===நன்மை===

 • ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படாமை. வாகன போக்குவரத்து தடைபடாமல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும்.

 • தேவையற்ற காத்திருப்பு இருக்காது.

 • சமிஞ்சை சந்திப்பில் போல் அதிகமாக வாகனம் இல்லாத நேரங்களிலும் கூட குறித்த சமிஞ்சை மாறும்மட்டும் காத்திருக்க வேண்டிய நிலையில்லாமை.

 • சமிஞ்சை சந்திப்பில் நடக்கும் விபத்தால் ஏற்படும் தடங்கல் அளவே இங்கும் ஏற்படும்.

===தீமை===

 • சமிஞ்சை சந்திபை கட்ட தேவையான இட வசதியை விட இதைக் கட்டுவதற்கு சற்று கூடிய இடவசதி வேண்டும்.

 • Roundabout இற்குள் நுழைய எத்தணிக்கும் வாகனங்களை விட உள்ளே இருக்கும் வாகங்களுக்கு முதலுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், ஒரு திசை நோக்கி அதிக வாகனங்கள் வருமானால் மற்றய வாகனங்கள் உள் நுழைய தங்களின் சந்தர்ப்பம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பது முடிவற்றதாகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் “starvation” என்று சொல்வார்கள். தங்களது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பதே முடிவாகிவிடும்.

சமிஞ்சை சந்திப்பு

===நன்மை===

 • சமிஞ்சைகள் இருப்பதால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாகன போக்குவரத்தை உருவாக்கலாம். அதாவது, வெகு தொலைவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது என்றால், இங்கே அந்த திசைக்கு போகத் தேவையான சமிஞ்சையை நேரம் கூட்டி வாகனங்களைத் தாமதப்படுத்தலாம்.

 • நான்கு (4) வீதிகள் சந்திக்கும், சமிஞ்சை சந்திப்பில் எல்லோரும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட உபயோகம் பெறுவார்கள். அதாவது, ஒருவருக்கும் சந்தியைக் கடக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம் நிகழாது.

===தீமை===

 • தேவையற்ற வாகன நெரிசல் ஏற்படலாம்.

 • ஒரு திசையில் அதிக வாகனங்கள் வந்துகொண்டிருக்குமானால், அந்த திசையில் தேவையான சமிஞ்சை மாறுவதற்கு காத்துக்கொண்டிருப்பதால் வகன நெரிசல் ஏற்படலாம். மற்றய திசையில் வாகனங்கள் இல்லாதிருப்பினும் சமிஞ்சை அந்தத் திசைக்கும் வீணே உபயோகப்படுத்தப்படும்.

 • சமிஞ்சை சந்திப்பில் சமிஞ்சைகளில் கோளாறு ஏற்பட்டாலோ (அ) மின்சாரம் தடைப்பட்டாலோ அந்த சமிஞ்சை சந்திப்பை வழிநடத்துவதற்கு ஒரு காவல்துறை அதிகாரி பிரசன்னமாக வேண்டியிருக்கும் (அ) வாகன போக்குவரத்து மிகவும் மந்தமான நிலையில் நடைபெறும்.

 • சமிஞ்சை சந்திப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை சரி பார்க்க ஒரு வல்லுனரின் உதவி தேவைப்படும். இதனால் வல்லுனருக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டு அவர் அதை திருத்தும் வரைக்கும் வாகன போக்குவரத்து மந்தமாக காணப்படும். இதனால் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.

No responses yet